fbpx

ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய மாற்றங்கள்..!! மக்களே ரெடியா..?

இன்னும் சில நாட்களில் ஜூன் மாதம் முடிவடைய இருக்கிறது. ஜூலை மாத தொடக்கத்தில் உங்களுடன் தொடர்புடைய பல்வேறு விஷயங்கள் மாற வாய்ப்பு உள்ளது. அதன்படி, எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் மாதந்தோறும் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாற்றி வருகின்றன. வணிக சிலிண்டர்களின் விலையானது ஏப்ரல், மே மற்றும் ஜூன் முதல் தேதியில் குறைக்கப்பட்டது. எனினும் கடந்த சில மாதங்களாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை. இந்த முறை வணிக ரீதியாக 14 கிலோ எல்.பி.ஜி. சிலிண்டரின் விலையும் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பின், வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் வெளிநாட்டிலுள்ள கிரெடிட் கார்டு செலவுகளுக்கு TCS கட்டணத்தை விதிக்கும் ஏற்பாடாக இருக்கலாம். இதன்கீழ் உங்களது செலவு 7 லட்சம் (அ) அதற்கு மேல் இருந்தால் நீங்கள் 20% டிசிஎஸ் செலுத்த வேண்டும். அதோடு டெல்லி, மும்பை உள்ளிட்ட பிற நகரங்களில் எண்ணெய் நிறுவனங்கள் மாதத்தின் முதல் வாரத்திலேயே சிஎன்ஜி-பிஎன்ஜி விகிதத்தை மாற்றுகிறது. இதுபோன்ற நிலையில், ஜூலை மாதத்தில் விலையில் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தங்கத்தின் ஹால்மார்க் குறித்த புதிய விதிகள் ஜூன் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

Chella

Next Post

மாணவிகளே உஷார்..!! ஜாலி ரெய்டுக்கு அழைத்த நண்பன்..!! குடோனில் வைத்து தோழியை பலாத்காரம் செய்த கொடூரம்..!!

Tue Jun 27 , 2023
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் ஆற்றுங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கிரண். இவருக்கு பெண் தோழி ஒருவர் இருக்கிறார். இவருக்கு கல்லூரி முடிந்த நிலையில், தனது பெண் தோழியுடன் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள உணவகத்தில் சாப்பிட சென்றுள்ளார். இதையறிந்த கிரண், தோழியை பார்ப்பதற்காக உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்று, சாப்பிட்டு முடித்து விட்டு வா… ஜாலியாக ஒரு ரெய்டு போகலாம். அப்படியே உன்னை வீட்டில் விட்டு விடுகிறேன் என சொல்லி, […]

You May Like