தமிழ்நாடு அரசில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதேபோல் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்படும். அந்த வகையில், தற்போது 31 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக 9 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
9 புதிய மாவட்ட ஆட்சியர்கள்
★ நெல்லை மாவட்ட ஆட்சியராக இருந்த கார்த்திகேயன் மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக ஆர்.சுகுமார் நியமனம்
★ திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக சரவணன் நியமனம்
★ திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பிரதாப் நியமனம்
★ கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக தினேஷ்குமார் நியமனம்
★ தருமபுரி மாவட்ட ஆட்சியராக சதீஷ் நியமனம்
★ திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக தர்ப்பகராஜ் நியமனம்
★ திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக மோகனசந்திரன் நியமனம்
★ திருவாரூர் மாவட்ட ஆட்சியராக சி. சௌந்தரவல்லி நியமனம்
★ விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக ஷேக் அப்துல் ரகுமான் நியமனம்
★ திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, வணிகவரித்துறையின் இணை ஆணையராக நியமனம்
★ தருமபுரி ஆட்சியர் சாந்தி, பட்டுப்பூச்சி வளர்ப்பு துறை இயக்குநராக மாற்றம்
★ தொழில் நுட்ப கல்வி ஆணையராக இன்னசண்ட் திவ்யா நியமனம்
★ கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனராக கண்ணன் நியமனம்
★ நகராட்சி நிர்வாக இணை ஆணையராக ஐ.ஏ.எஸ் அதிகாரி லலித் ஆதித்ய நீலம் நியமனம்