தமிழ்நாட்டில் புதிய மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 18-ம் தேதி அறிவித்தார்.. எனினும், வீட்டு இணைப்பிற்கான 100 யூனிட் இலவச மின் விநியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது… 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 கூடுதலாக கட்டணம் விதிக்கப்பட உள்ளது..
மாதம் 301 – 400 வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ரூ.147.50 உயர்த்தி பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.. 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவர்களுக்கு ரூ.298.50 கூடுதல் மின் கட்டணம் செலுத்த வேண்டும்.. கேஸ் இணைப்புகளை போல், 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் திட்டம் அறிமுகமாகிறது.. ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டது..
அதன்படி, மின்சார வாரிய இணையதளங்களில் புதிய மின் கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டும் என்றும், மின் கட்டண உயர்வு தொடர்பான கருத்துகளை தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.. அந்த அடிப்படையில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில் இன்று முதல் புதிய மின் கட்டணம் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. 2026 – 27ம் ஆண்டு வரை புதிய மின்கட்டண உயர்வு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது..