fbpx

அதிர்ச்சி…! புகை குண்டு வீசியவர் குறித்து புதிய தகவல்…! விசாரணையில் வெளியான தகவல்…!

நாடாளுமன்றத்தில் வண்ண புகை குண்டுகளை வீசி அத்துமீறலில் ஈடுபட்ட 4 பேரும் சிக்னல் செயலி மூலம் தொடர்பில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி முதல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வழக்கம்போல இரு அவைகளும் நடைபெற்று வந்த நிலையில், இரு இளைஞர்கள் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அத்துமீறி அவைக்குள் நுழைந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியான துரிதமாக செயல்பட்ட எம்.பி.,கள் இருவரையும் மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர். தொடர்ந்து அங்கிருந்த பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில், நாடாளுமன்றத்தில் வண்ண புகைகுண்டு வீசிய மனோரஞ்சன் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்கள் படி, மைசூருவை சேர்ந்த மனோரஞ்சன் இதற்கு முன் பழைய நாடாளுமன்றத்தை பார்க்கவும் பிரதாப் சிம்ஹா அலுவலகம் மூலம் அனுமதி சீட்டு பெற்றுள்ளார். இதன் காரணமாக புதிய நாடாளுமன்றத்திற்கு அனுமதி சீட்டு பெறுவது எளிதாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில் வண்ண புகை குண்டுகளை வீசி அத்துமீறலில் ஈடுபட்ட 4 பேரும் சிக்னல் செயலி மூலம் தொடர்பில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக 4 மாதங்களுக்கு மேல் திட்டம் தீட்டியுள்ளனர். மேலும் பகத்சிங் குறித்த புத்தகங்கள் மற்றும் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Vignesh

Next Post

நாடாளுமன்றத்தில் கண்ணாடி கூண்டு பாதுகாப்பு!… மனிதர்களை ஸ்கேன் செய்யும் இயந்திரம் பொருத்த முடிவு!

Thu Dec 14 , 2023
கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி நாடாளுமன்றத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதன் 22ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் தான் மக்களவையில் அசம்பாவித சம்பவம் ஒன்று நடந்தது. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வழக்கம்போல் தொடங்கியது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் நடக்கும் விவாதங்களை பொதுமக்கள் பார்வையாளர் மாடத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று 2 பேர் பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவை அரங்குக்குள் […]

You May Like