fbpx

“வேலை முடிஞ்சுதுன்னா மூட்டையை கட்டிடனும்..” பாஸ் கால் பண்ணாலும் கட் தான்.”..!! புதிய சட்டம் வந்தாச்சு..!

தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் உலகின் பல்வேறு நாடுகளும் பலவிதமான சட்டங்களை நிறைவேற்றி வருகிறது. பெரும்பாலான நாடுகளில் அலுவலகப் பணியாளர்கள் தங்களது பணி முடித்து வீடு திரும்பியும் அலுவலக வேலைகளை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது .

செல்போன் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சிக்கு பிறகு இந்த தொந்தரவு மேலும் அதிகரித்து இருக்கிறது. வீடுகளுக்கு சென்ற பணியாளர்களிடம் அவர்களது ஓய்வு நேரங்களில் அவசர வேலைகளை முடிக்குமாறு கட்டளையிடும் வழக்கமும் தொடர்ந்து வருகிறது. இதனால் முறையான ஓய்வின்றி பணியாளர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.

இதனை சரி செய்யும் வகையில் வேலை நேரம் முடிந்த பின்பு பணியாளர்களை தொந்தரவு செய்யாமல் இருப்பதற்கு ஐரோப்பிய நாடுகள் சட்டம் இயற்றியுள்ளன.ஃபிராண்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற நாடுகளில் வேலை முடிந்த பின்பு உயர் அதிகாரி அல்லது சக ஊழியரோ வேலை சம்பந்தமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டால் அந்த அழைப்பை நிராகரிக்க உரிமை உண்டு என சட்டம் இயற்றியிருக்கிறது.

இந்த சட்டம் தற்போது ஆஸ்திரேலிய நாட்டிலும் ஏற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊழியர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கும் அவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் குடும்பத்துடன் செலவிடுவதற்கும் ஆஸ்திரேலியாவில் இந்த புதிய சட்ட திருத்தம் சில நாட்களில் அமலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Post

’வயாகரா’ மாத்திரை இந்த கொடிய பாதிப்பையும் சரி செய்கிறதா..? அதிர்ச்சியூட்டும் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு..!!

Thu Feb 8 , 2024
இந்தக் காலத்தில் அல்சைமர் நோய் பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. பொதுவாக வயதானோருக்கு அதிகம் ஏற்படும் இந்த நோய் மிகவும் மோசமான நோய்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. நாம் யார்.. நம்மை சுற்றி இருக்கும் குடும்பத்தினரே யார் என்று தெரியாமல் போவது.. நாம் இத்தனை காலம் வாழ்ந்த வாழ்க்கையையே கேள்விக்குள்ளாக்குவது போல அமைந்துவிடுகிறது. இதற்கிடையே, அல்சைமர் நோயை எதிர்த்துப் போராடக்கூடிய மருந்துகளைக் கண்டறிய 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு […]

You May Like