fbpx

வரும் 27ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! புரட்டிப்போடும் கனமழை..!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

வரும் 27ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நாளை தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் 27ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, வரும் 27ஆம் தேதிக்கு பின் தமிழ்நாட்டில் மழை ருத்ரதாண்டவம் ஆடும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

Chella

Next Post

மனிதர்களை அழிக்க தயாரான ஏலியன்ஸ்?… விண்மீன் மண்டலத்தில் 2 உலகங்கள் கண்டுபிடிப்பு!… விண்வெளி நிபுணர் அதிர்ச்சி தகவல்!

Fri Nov 24 , 2023
விண்மீன் மண்டலத்தில், பூமியை விட மிகவும் பழமையான சுமார் 110 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திரங்களைச் சுற்றிவரும், வேற்று கிரகவாசிகள் பதுங்கியிருக்கக்கூடிய இரண்டு உலகங்கள் இருக்கலாம் என்று விண்வெளி நிபுணர் ஒருவர் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். ஏலியன்ஸ்கள் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகள் எங்காவது இருக்கிறார்களா என்பது குறித்து பல்வேறு ஆய்வுகள் இன்றளவு நடத்தப்பட்டு வருகின்றன. “அவ்வப்போது வானில் பறக்கும் தட்டை பார்த்தேன், என் கமராவில் வித்தியாசமான உருவம் உள்ளது, நீளமான […]

You May Like