fbpx

புதுசா திருமணம் ஆனவங்களா நீங்க.? இந்த 4 விஷயங்கள மட்டும் பகிர்ந்துக்காதீங்க.!

ஆண் பெண் இருவரும் இணைந்து வாழ்வதே இல்லற வாழ்வு. நம் நாடுகளில் கலாச்சாரம் மற்றும் மரபுகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இங்கு ஒரு ஆணும் பெண்ணும் திருமண பந்தத்தின் மூலம் இணைகிறார்கள். காதல் திருமணமாக இருந்தால் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகம் இருக்கும். ஆனால் பெற்றோர்கள் முடித்து வைத்த திருமணத்தில் இது போன்ற வாய்ப்புகள் குறைவு. எனவே கணவன் மற்றும் மனைவி இருவரும் தங்களது இல்லற பந்தத்தின் ஆரம்ப நிலையில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்காக மனம் விட்டு பேசுகிறார்கள். எவ்வாறு பேசும் போது பகிரப்படும் விஷயங்கள் பின்னாளில் சிக்கலாக அமைந்து விடுகிறது. அப்படியான விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.

புதிதாக திருமணத்தில் இணைந்திருக்கும் போது உங்கள் முந்தைய உறவின் சிக்கல்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். இது உங்களது புதிய உறவில் சிக்கலை ஏற்படுத்தலாம். சில நேரங்களில் இது போன்ற உரையாடல்கள் எதிர்மறை எண்ணங்களை தோற்றுவிக்க கூடும். உங்கள் பலவீனங்களை திருமண உறவின் ஆரம்பத்திலேயே உங்கள் இணையரிடம் தெரிவிக்க வேண்டாம். திருமண பந்தத்தில் கணவன் மற்றும் மனைவியிடையே ஒளிவு மறைவின்றி இருக்கலாம் என்றாலும் சில விஷயங்களை ஆரம்பத்திலேயே பகிர்ந்து கொள்வது சரியான அணுகுமுறையாக இருக்காது.

உங்களது தாய் வீட்டில் இருக்கும் குடும்ப சிக்கல்களை உங்களது இணையரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். இது உங்களை குறைத்து மதிப்பிடுவதற்கு அவருக்கு ஒரு வாய்ப்பாக அமையலாம். நன்றாக புரிந்து கொள்ளும் வரை இதுபோன்ற விஷயங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நலம். கணவன் மற்றும் மனைவி இடையே வெளிப்படை தன்மை வேண்டும் என்றாலும் சில விஷயங்களை கூறாமல் இருப்பதே நலம். திருமணத்திற்கு முன் உங்களுக்கு காதல் உறவிருந்து அந்த உறவில் முறிவு ஏற்பட்டிருந்தால் அது தொடர்பான விஷயங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். மேலும் முந்தைய உறவின் நெருக்கத்தையும் தவிர்த்துக் கொள்வது நலம். இல்லையென்றால் தேவையில்லாத சந்தேகங்களை உங்கள் இணையர் மனதில் விதைக்கும்.

Next Post

இளநீரில் ஜெல்லி செஞ்சு சாப்பிடலாம் வாங்க.! சுவையான சிம்பிள் குட்டீஸ் ரெஸிபி.!

Wed Dec 6 , 2023
நார்மலான ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு செஞ்சி கொடுத்து போரடிக்குதா டிஃபரண்டா ஒரு டிஸ் செஞ்சு உங்க வீட்டு குட்டீஸ்க்கு சர்ப்ரைஸ் கொடுக்கணுமா.? வாங்க இந்த இளநீர் ஜெல்லி ட்ரை பண்ணி பார்க்கலாம். இது செய்வதற்கு ஒரு இளநீர், ஒரு பாக்கெட் ஜெல்லி பவுடர், 250 கிராம் சீனி மற்றும் சங்குப்பூ ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரத்தில் இளநீரை ஊற்றி அவற்றுடன் ஜெல்லி பவுடர், சீனி, இள தேங்காயையும் […]

You May Like