fbpx

புதிய மைல்கல்!… நிலவை நோக்கிய பயணத்தில் சந்திரயான் 3 விண்கலம்!… 25.30 மணிநேர கவுண்ட் டவுன்!… சிறப்புகள் இதோ!

இஸ்ரோவின் மைல்கல் திட்டமான சந்திரயான் 3 விண்கலம் இன்று பிற்பகல் 1.05 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், அதன் சிறப்புகள் என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்தே சந்திரனை ஆய்வு செய்யும் பணியை இஸ்ரோ மேற்கொண்டது. அந்த வகையில், சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் நிலவுக்கு மூன்றாவது முறையாக தனது பயணத்தை இஸ்ரோ தொடங்கியுள்ளது. சந்திரயான்-3 விண்கலமானது நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்யவுள்ளதால், இஸ்ரோவின் மைல்கல் திட்டமாக பார்க்கப்படுகிறது. அதன்படி, புதிய சோதனை, புதிய முயற்சி, புதிய தொழில்நுட்பம் என முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சந்திரயான் 3 திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல பயணம் வெற்றிபெறும் பட்சத்தில் விண்வெளித்துறையில் மீண்டும் ஒரு மைல்கல் சாதனையை இஸ்ரோ நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராய்ந்து அதிநவீன வசதிகளுடன் சந்திரயான் 3 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சோதனையின் மூலம் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதே சந்திரயான் 3-ன் பிரதான பணியாக உள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகிய கலன்களை உள்ளடக்கியதாக சந்திரயான் 3 தயாரிக்கப்பட்டுள்ளது. துல்லிய வடிவமைப்பாலும், மாறுபட்ட வடிவத்திலும் லேண்டர் மற்றும் ரோவர் உருவாக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 1752 கிலோ எடை கொண்ட லேண்டர், 2148 கிலோ உந்துவிசை செயல்திறன் என மொத்தம் 3900 கிலோ எடை கொண்டதாகும். நிலவின் மேற்பரப்பில் லேண்டரை பாதுகாப்பாக மற்றும் மென்மையாக தரையிறக்குவது சந்திராயன் 3-ன் முக்கிய பணியாக கூறப்படுகிறது.

அதோடு ரோவர் சுற்றுவதை உறுதி செய்வது அறிவியல் ரீதியிலான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதும் சந்திராயன் 3-ன் இலக்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்வெளி உலகமே வியக்கும் சந்திராயன் 3 திட்டம் 615 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சந்திரயான்-3, விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட் டவுன் வியாழக்கிழமையான நேற்று பிற்பகல் 1 மணிக்கு தொடங்கியுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில், இன்று பிற்பகல் 2.35 மணிக்கு சந்திராயன் 3 விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில் அதற்கான 25.30 மணி நேர கவுன்ட் டவுனைத் தொடங்கப்பட்டுளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2008 அக்., 22ல் நிலவுக்குச் சென்ற சந்திரயான் – 1 விண்கலம், நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை உலகிற்கு வெளிப்படுத்தியது. இதேபோல் சந்திரயான் – 3 விண்கலமும், நிலவு தொடர்பான பல புதிய தகவல்களை கண்டறிய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Kokila

Next Post

இந்தியாவில் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை அமைக்க டெஸ்லா நிறுவனம் பேச்சுவார்த்தை!... 5 லட்சம் கார்களை தயாரிக்க திட்டம்!

Fri Jul 14 , 2023
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் தொழிற்சாலையை அமைக்க மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் தனது டெஸ்லா கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த மே மாதம் டெஸ்லா நிறுவனம் இந்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் கார் தயாரிப்பு தொழிற்சாலையைத் தொடங்குவதற்கு அரசு சில சலுகைகளை அளிக்க […]

You May Like