fbpx

QR கோடுடன் புதிய பான் கார்டு.. 50 ரூபாயில் வீடு தேடி வரும்.. எப்படி விண்ணப்பிப்பது?

இந்திய அரசாங்கம் சமீபத்தில் நிரந்தர கணக்கு எண் (PAN) 2.0 ஐ அறிவித்தது, இது மிகவும் பாதுகாப்பானது மற்றும் க்யூ.ஆர் (QR) குறியீட்டையும் உள்ளடக்கிய பான் கார்டின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். பான் கார்டில் க்யூ.ஆர் குறியீடு 2017-18 இல் அறிமுகப்படுத்தப்பட்டாலும், பல பயனர்கள் இன்னும் க்யூ.ஆர் குறியீடு இல்லாமல் பழைய பான் கார்டைக் கொண்டுள்ளனர். இந்நிலையில் தான், பான் கார்டு குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, QR குறியீட்டுடன் கூடிய பான் கார்டுகள் மின்னஞ்சல் வழியாக இலவசமாக வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், தற்போது நடைமுறையில் உள்ள பான் அட்டையில், எண் மற்றும் எழுத்தில் 10 இலக்கு அடையாள குறியீடு இருக்கும். அதனை தற்போது மேம்படுத்தி QR குறியீடு வடிவத்தில் வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பான் கார்டை எப்படி பெறுவது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மின்னஞ்சல் வழியாக PAN கார்டைப் பெறும் வழிமுறைகள் :

முதலில் https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டு.

உங்கள் பான் கார்டு, ஆதார் மற்றும் பிறந்த தேதி விவரங்களை அந்த தளத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

தேவையான தகவல்களை சமர்ப்பித்த பிறகு, டிக் பாக்ஸைத் தேர்ந்தெடுத்து “சமர்ப்பிக்க” என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

வருமான வரித் துறையின் புதுப்பிக்கப்பட்ட விவரங்களை சரிபார்த்துவுடன், OTP பெறுவதற்கான ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

இதைத் தொடர்ந்து கட்டணத் தொகையைச் சரிபார்த்து அதற்கான ஒப்புதலை அளிக்க வேண்டும்.

கட்டணம் செலுத்தப்பட்ட பின், பயனரின் மின்னஞ்சல் ஐடிக்கு டிஜிட்டல் பான் கார்டு வழங்கப்படும்.

மேலும், பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடிக்கு டிஜிட்டல் PAN வர 30 நிமிடங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு PAN வரவில்லை என்றால், கட்டணமில்லா எண்ணை அழைக்கலாம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

Read more ; இடியோபாடிக் நுரையீரல் ஃபைப்ரோஸிஸால் அவதிப்பட்ட ஜாகிர் ஹுசைன்.. இதன் அறிகுறிகள் என்னென்ன..?

English Summary

New PAN card with QR code.. 50 rupees house search.. How to apply?

Next Post

டிச.24 கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Mon Dec 16 , 2024
December 24th has also been declared as a local holiday in Kanyakumari.

You May Like