fbpx

”ஒரு வாரத்தில் புதிய மின் இணைப்பு”..!! ”தாமதமானால் நுகர்வோருக்கு இழப்பீடு”..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மே மாதத்தில் மின்சார விநியோக சட்டத்தில் திருத்தம் செய்ய வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், புதிய மின் இணைப்பு கோரிய 7 நாட்களில் மின் இணைப்பை வழங்காவிட்டால் நுகர்வோருக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ”அனைத்து கட்டுமானப் பணிகளும் தயார் நிலையில் இருந்து புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் புதிய நுகர்வோருக்கு ஒரு வாரத்தில் மின் இணைப்பு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்க தவறினால் நாளொன்றுக்கு ரூ.100 என்ற வீதம் மின் வாரியம் நுகர்வோருக்கு அபராதம் செலுத்தும்.

ஒருவேளை மின் இணைப்பு வழங்க தாமதமானால், அதற்கு மின் இணைப்பு விரிவாக்கம் தேவைப்படுதல், முக்கிய மின்மாற்றி அமைக்கப்பட வேண்டியது, புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டிய போன்ற காரணங்களுக்கு கூட விதிமுறையில் கூறப்பட்டிருக்கும் நாள்களை தாண்டி காலத்தாமதம் ஆகக்கூடாது. மின்வாரிய அதிகாரிகள் கண்டிப்பாக 10 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும்.

இழப்பீடு வழங்கப்படும் 10 நாட்களை தாண்டி இணைப்பு வழங்குவது தாமதிக்கப்படாது. மேலும் புதிய இணைப்பிற்கான விண்ணப்பத்தில் ஏதேனும் தகவல்கள் பூர்த்தி செய்யவில்லை, போதிய ஆவணங்கள் இணைக்கப்படவில்லை என்றால் அது குறித்து விண்ணப்பித்தவருக்கு 3 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய விதிமுறைகள் குறித்துஅதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை அது கிடைத்தவுடன் அதனை முழுமையாக பின்பற்றுவோம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Chella

Next Post

பெற்றோர்களே உஷார்..!! 9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பிளஸ்2 மாணவன்..!! சென்னையில் அதிர்ச்சி..!!

Fri Sep 22 , 2023
சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். 9ஆம் வகுப்பு படிக்கும் இளைய மகளுக்கு கடந்த சில நாட்களாக மாதவிடாய் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதுகுறித்து அந்த சிறுமி, தனது தாயிடம் கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் தாய் உடனே மகளை எழும்பூரில் உள்ள குழந்தையின் நல மருத்துவமனை அழைத்துச் […]

You May Like