தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், இனி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்தால் ஒரு ஆண்டு சிறை அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் எதிரொளியாக தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை அந்தந்த நிறுவனங்களை அமல்படுத்தியுள்ளன. ஜிபிஎஸ் மூலம் பயனரின் இருப்பிடத்தை கண்டறிந்து தமிழகத்தில் இருந்து விளையாட முயன்றால் எச்சரிக்கப்படும். மீறி விளையாடினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது என்று நிறுவனங்கள் கூறியுள்ளன.