fbpx

பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு புதிய திட்டம்!… ரூ.1 லட்சம் கடன்!… மத்திய அரசு அறிவிப்பு!

சிற்பி, குயவர் உள்ளிட்ட 18 பாரம்பரிய கைவினை தொழில்புரிவோரை முன்னேற்ற மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா என்கிற புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

பிரதமரின் கடனுதவி திட்டங்களால் மக்கள் அதிகளவில் பயனடைந்து வருகின்றனர். அந்தவகையில், இந்தியாவில் உள்ள நெசவாளர்கள், பொற்கொல்லர்கள் உள்ளிட்ட பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு உதவும் வகையில் விஸ்வகர்மா யோஜனா என்னும் திட்டம் துவங்கப்பட இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்துள்ளார். அதாவது, இந்த திட்டத்தின் வாயிலாக கைவினை கலைஞர்களுக்கு அதிகபட்சமாக 5 சதவீத வட்டியுடன் ஒரு லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, விஷ்வகர்மா திட்டத்தின் வாயிலாக படகு தயாரிப்பாளர்கள், குயவர்கள், சிற்பிகள், கொத்தனார், பொற்கொல்லர், பூட்டு தொழிலாளிகள், செருப்பு தொழிலாளிகள் என ஏகப்பட்ட தொழிலாளர்கள் இந்த கடனுதவியை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதற்கட்டமாக தொழிலாளிகள் ஒரு லட்சமும், இரண்டாம் கட்டமாக ரூ. 2 லட்சம் வரையிலும் கடன் உதவி பெற்றுக் கொள்ளலாம். மேலும், இந்த திட்டத்திற்காக ரூ. 13 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் 17ஆம் தேதி முதல் திட்டம் அமலுக்கு வர இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஏழைத் தொழிலாளர்களின் தொழிலை விரிவாக்கும் வகையில் இந்த கடனுதவி வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Kokila

Next Post

ராணுவ வீரர்களின் தன்னலமற்ற தியாகத்திற்கு நாடே கடமைப்பட்டுள்ளது….! லடாக்கில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்த குடியரசு தலைவர் வருத்தம்….!

Sun Aug 20 , 2023
பனி பிரதேசமான லடாக்கில் மிக உயரமான மலை குன்றுகள், ஆழமான பள்ளத்தாக்குகள் உள்ளிட்டவை அதிகமாக காணப்படுகிறது. இந்திய எல்லையில் இருக்கக்கூடிய இந்த லடாக் பகுதியில் பல்வேறு இந்திய ராணுவ வீரர்கள் பணியில் இருக்கிறார்கள். அங்கே அமைக்கப்பட்டு இருக்கின்ற முகாம்களில், தங்கி இருக்கும் ராணுவ வீரர்கள், தங்களுடைய பணியிடத்திற்கு வாகனங்களின் மூலமாக, இடம்பெயர்ந்து வருகிறார்கள். இப்படி லடாக்கின் லே மாவட்டத்தில் பணியில் இருந்த வீரர்களை ஏற்றிக்கொண்டு, நேற்று மூன்று ராணுவ வாகனங்கள் […]

You May Like