fbpx

சென்னை வாகன ஓட்டிகளே…! விரைவில் வரும் புதிய வேக கட்டுப்பாடு…! கமிஷனர் அதிரடி அறிவிப்பு…!

சென்னை நகரத்தில் போக்குவரத்தை மேம்படுத்துவதிலும் சாலை விபத்துக்கள் மற்றும் இறப்புகளைக் குறைப்பதிலும் தான் கவனம் செலுத்துவதாகக் காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

சாலை விபத்தில் சேதம் அடைந்த வாகனங்களில் சிக்குபவர்களை மீட்பதற்கான ‘வீரா'(VEERA) என்ற வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை காவல்துறை ஆணையர் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; சாலை விபத்தில் சிக்கிய மற்றும் விபத்துக்குள்ளான வாகனங்களுக்குள் சிக்கியவர்களைக் காப்பாற்ற நாட்டிலேயே முதன்முறையாக VEERA சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர் தலைமையிலான குழு மோட்டார் வாகனங்களுக்கான வேக வரம்புகளை பரிந்துரைத்ததாகவும், பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு புதிய விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறினார். சென்னைக்குள் வாகனங்களை எவ்வளவு வேகத்தில் ஓட்டலாம் என்பது குறித்து 10 நாட்களில் அறிவிக்கப்படும் என்றார்.

நிர்பயா திட்டம், நவீனமயமாக்கல் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின் கீழ் காவல்துறைக்கு நிறைய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். நவீன கட்டுப்பாட்டு அறை கட்டப்பட்ட வருகிறது. ரவுடி கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் போதைப்பொருள் மற்றும் புகையிலை பொருட்களுக்கு எதிரான இயக்கம் போன்ற திட்டங்கள் உள்ளன. அந்த திட்டங்களை மேலும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல காவல்துறை பணியாற்றி வருகிறது என்றார்.

இது குறித்து போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் சுதாகர் கூறியதாவது: கடந்த ஆண்டில் மொத்தம் 361 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன, இந்த ஆண்டு இதுவரை 341 வழக்குகள் பதிவாகியுள்ளன. உயிரிழப்புகள் மற்றும் விபத்துகள் குறையும் வாய்ப்பு உள்ளதாக கூறினார்.

Vignesh

Next Post

மாமனாரால் கர்ப்பமான மருமகள்….? கணவருக்கு ஷாக் கொடுத்த மனைவி….!

Fri Sep 15 , 2023
பெரும்பாலும், வட இந்தியாவில், நடைபெறும் பல்வேறு சம்பவங்கள் வினோதமாகவே இருக்கிறது. இன்றளவும் அது போன்ற செய்திகளை நாம் பார்க்கும்போது, நாட்டில் இப்படி எல்லாம் கூட நடக்குமா? என்று யோசிக்கும் அளவிற்கு அந்த செயல்பாடுகள் இருக்கும். அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர வைத்துள்ளது. அதாவது, உத்திரபிரதேச மாநிலத்தில் வசித்து வரும் ஒரு பெண், காவல் நிலையத்தில், தன்னுடைய மாமனார் மீது, […]

You May Like