தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (நவ.20) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நவ.23ஆம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும். அதுவரை மிதமான அல்லது கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, 23ஆம் தேதி தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாகவும், அது புயலாக மாறுமா என்பதை வரும் நாட்களில் தான் உறுதியாக கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக உருவாகும்பட்சத்தில், அது தமிழ்நாட்டை நோக்கி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேபோல், சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களைப் பொறுத்தவரை சனிக்கிழமை முதல் மழைப்பொழிவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கு..!! இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்..!!