எலான் மஸ்க் பிரபலமான நியூரலிங்க், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ட்விட்டர் என பல்வேறு துறைகளை தன்வசத்தில் வைத்துள்ளார். இந்த நிலையில் தனது நியூரலிங்க் நிறுவனம் அப்டேட்டிங்காக, புதிய ‘கம்ப்யூட்டிங் மூளை’ என்கிற நாணயம் வடிவிலான வயர்லெஸ் சாதனம் ஒன்றை உருவாக்கி உள்ளனர்.
இதனை தொடர்ந்து அதற்காக மனித சோதனையில் வருகிற 6 மாத காலத்தில் தொடங்க உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். இது மனித மூளையில் உள்ள அனைத்து எண்ணங்களை அறிந்துகொள்ள மிகவும் உதவுகிறது.
இந்த ஆய்வின் தொடர்பாக தன்னுடைய நிறுவன ஊழியர்கள் மீதே அதிருப்தியில் இருக்கின்றார் எலான் மஸ்க். இதில் தனக்கு போட்டியாக உள்ள சிங்க்ரானை – அணுகியுள்ளார். சிங்கிரான் நிறுவனம் ஏற்கனவே 4 பேரை இதுவரை இந்த சோதனைக்கு உட்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.