பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தேர்தல் பத்திரங்களின் மூலம் பல்வேறு நிறுவனங்களும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கினார். இந்தத் தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது. தேர்தல் பத்திரங்களில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும்.
அரசியல் கட்சிகள் எவ்வளவு நன்கொடை பெற்று இருக்கின்றன என்ற விவரமும் வாக்காளர்களுக்கு தெரிய வேண்டும் என கூடிய நீதிமன்றம் தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்த எஸ்பிஐ வங்கியிடம் அவற்றிற்கான தரவுகளை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திரங்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
இந்த தகவல்கள் தலைமை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த தேர்தல் பத்திரங்களின் மூலம் பாஜக அதிக அளவு நன்கொடையை பெற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது. மேலும் இது மிகப்பெரிய சர்ச்சையாகவும் உருவெடுத்துள்ளது. அமலாக்கத்துறையின் மூலம் பல நிறுவனங்களை மிரட்டி பாஜக நன்கொடை பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. மேலும் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் நிறுவனத்திடம் இருந்து பாஜக தேர்தல் நிதி பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட சில தகவல்கள் மேலும் பல சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது உச்ச நீதிமன்றம் 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி வரை எஸ்பிஐ வங்கியின் மூலம் விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்களுக்கான தகவல்களை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பித்தது. ஆனால் தேர்தல் பத்திரங்கள் 2017 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா அரசால் கொண்டுவரப்பட்டு 2018 ஜனவரி முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.
2018 ஜனவரி முதல் 2019 ஏப்ரலுக்கு முன்பு வரை கிட்டத்தட்ட 15 மாதங்களில் 5813 தேர்தல் பத்திரங்களின் மூலம் 4,362 கோடி ரூபாய் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டிருப்பதாக ஆர்டிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பணம் எந்த அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இவற்றை குணமாக மாற்றிய அரசியல் கட்சிகள் எவை என்பது போன்ற தகவல்கள் தெரியவில்லை.
2018 ஜனவரி மாதம் முதல் 2019 ஏப்ரலுக்கு முந்தைய காலகட்டத்தில் உள்ள தகவல்களை ஏன் உச்சநீதிமன்றம் கேட்கவில்லை.? என்று கேள்வியும் எழுந்திருக்கிறது. இப்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்கள் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் சொல்லப்பட்டால் அது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.