மகாராஷ்டிரா மாநிலத்தில் மிரா என்ற பகுதியில் இருந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சரஸ்வதி மனோஜ் உள்ளிட்ட இருவர் திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர்கள் இருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து, காவல்துறை நடக்க தகவல் கொடுக்கப்பட்டது காவல்துறையினர் அங்கு சென்று பார்த்த போது சரஸ்வதி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டிருந்தார்.
மேலும் அவருடைய உடல் பாகங்கள் பல்வேறு பாத்திரங்களில் கிடந்தது அதனை சேகரித்து காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் மனோஜ் சரஸ்வதியை கொடூரமான முறையில் கொலை செய்ததுடன் மர அறுவை இயந்திரத்தால் அவரது உடலை துண்டித்துண்டாக வெட்டி இருக்கிறார் என்பது தெரிய வந்தது.
அவரை கைது செய்த காவல்துறையினர் மனோஜிடம் நடத்திய விசாரணையில் அவர் கொடுத்த வாக்குமூலத்தின் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதாவது சரஸ்வதி ஆதரவற்றோர் இல்லத்தில் தன்னுடைய தாயும் மரணத்திற்குப் பிறகு வசிக்கத் தொடங்கினார். பள்ளி படிப்பை அங்கு தான் முடித்தார் சரஸ்வதி என்று தெரிவித்துள்ளார் மனோஜ் அவருக்கு 18 வயது ஆன பின்னர் அங்கிருந்து வெளியேறி முதலில் சகோதரி வீட்டில் 4️ வருடங்கள் வசித்ததாகவும் மனோஜ் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு தான் மும்பைக்கு வந்த சரஸ்வதிக்கு மனோஜுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவர் வேலை தேடி கஷ்டப்பட்ட காலத்தில் சரஸ்வதிக்கும், மனோஜ்க்கும் பழக்கம் ஏற்பட்டதால் சரஸ்வதிக்கு மனோஜ் பல உதவிகளை செய்திருக்கிறார் வேலை, வீடு உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து கொடுத்த மனோஜ் சிறிது காலம் கழித்து தன்னுடைய வீட்டிலேயே தாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்து அழைத்துச் சென்றுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
இப்படியான சூழ்நிலையில் தான் இருவரும் ஒரே வீட்டில் இருந்த போது இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து கோவிலுக்கு சென்று மாலை மாற்றிக் கொண்டனர். ஆனால் அதிகாரப்பூர்வமாக திருமணத்தை பதிவு செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், சரஸ்வதி தன்னுடைய படிப்பு குறித்த ஆவணங்களை எடுப்பதற்கு அபபோது ஆசிரமத்திற்கு செல்லும் சமயத்தில் அங்கு இருப்பவர்களிடம் மனோஜ் தன்னுடைய தாய் வழி மாமா எனவும், அவர் வீட்டில் தான் வசிக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். அவர் மும்பையில் பெரிய துணி மில் முதலாளி, பெரிய பணக்காரர் என்றும் பொய் உரைத்திருக்கிறார் சரஸ்வதி.
மேலும் தங்களுக்குள் எந்தவித பாலியல் உறவும் நாங்கள் வைத்துக் கொள்ளவில்லை என்றும் தனக்கு எச்ஐவி நோய் இருந்ததால் நாங்கள் பாலியல் உறவு வைத்துக் கொள்ளவில்லை என்று மனோஜ் வாக்குமூலம் வழங்கியிருக்கிறார். அதோடு தனக்கு விபத்து ஏற்பட்ட போது இரத்தம் மாற்றம் செய்த போது பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து இந்த நோய் பரவி விட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.