Russia-Ukraine war: ரஷ்யா-உக்ரைன் போரில் ஒரு புதிய முன்னேற்றமாக, உக்ரைனுக்கு எதிரான கடுமையான மோதலில் தனது கூட்டாளியான ரஷ்யாவுக்கு உதவுவதற்காக அனுப்பப்பட்ட வட கொரிய வீரர்கள் போர்க்களத்தில் இருந்து ‘காணாமல் போயுள்ளதாக’ தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே, ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஏவுகணைகள், அணு ஆயுதம் மற்றும் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட உதவிகளைச் செய்திருப்பதாக அமெரிக்கா, உக்ரைன், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் உறுதிப்படுத்தியிருந்தன.
இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா உள்பட பலநாடுகள் முயன்றன. ஆனால் ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் இன்றுவரை முடிவுக்கு வரவில்லை. உக்ரைனுக்கு எதிராக நடத்தப்படும் போரில் ரஷ்யாவுக்கு உதவுவதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 11,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை வடகொரியா அனுப்பியுள்ளதாக கூறப்பட்டது.
இந்தநிலையில், உக்ரைனுக்கு எதிரான கடுமையான மோதலில் தனது கூட்டாளியான ரஷ்யாவுக்கு உதவுவதற்காக அனுப்பப்பட்ட வட கொரிய வீரர்கள் போர்க்களத்தில் இருந்து ‘காணாமல் போயுள்ளதாக’ தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென் கொரியாவின் தேசிய புலனாய்வு சேவை (NIS) அறிக்கையின்படி, தற்போது ரஷ்யாவில் உக்ரைனுக்கு எதிராகப் போரிடும் வட கொரிய துருப்புக்கள் எதுவும் இல்லை என்றும் ஜனவரி நடுப்பகுதியில் இருந்து, குர்ஸ்க் பகுதியில் உக்ரேனிய ஆயுதப் படைகளுக்கு எதிராக வட கொரிய வீரர்கள் சண்டையிடுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று NIS தனது அறிக்கையில் கூறியுள்ளது.
நியூயார்க் டைம்ஸ் (NYT) செய்தியின்படி, வட கொரிய துருப்புக்கள் அதிக உயிரிழப்புகள் காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் சுமார் 4,000 வட கொரிய வீரர்கள் தனது படைகளால் காயமடைந்தனர் அல்லது கொல்லப்பட்டனர் என்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகிறார். ரஷ்ய துருப்புக்களால் வட கொரிய வீரர்கள் ‘மனித கேடயங்களாக’ பயன்படுத்தப்பட்டதாகவும், ரஷ்ய படைகள் இழப்புகளைத் தவிர்க்க பின்தங்கிய நிலையில் இருந்ததாகவும் NYT அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. உக்ரேனிய தாக்குதல்களை எதிர்கொள்வதில் இந்த தந்திரோபாயம் பயனுள்ளதாக இருந்தாலும், ஆயிரக்கணக்கான வட கொரிய வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய இராணுவம் தங்கள் கூட்டாளிகளை தாக்குதல்களின் முன்னணியில் அனுப்பியதாகவும், உக்ரைனியப் படைகளிடம் சரணடைவதற்குப் பதிலாக தற்கொலை செய்து கொள்ளுமாறு கடுமையான உத்தரவுகளைப் பெற்றிருந்ததாகவும் கூறியுள்ளனர். மேலும் பல சந்தர்ப்பங்களில், உக்ரேனிய இராணுவத்தால் பிடிக்கப்படுவதைத் தடுக்க ரஷ்ய துருப்புக்கள் தங்கள் வட கொரிய வீரர்களை சுட்டுக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.
Readmore: பரபரப்பு…! மேலும் 487 இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்கா திட்டம்…!