fbpx

2வது திருமணம் செய்து 8 நாட்களில் 3 குழந்தைகளை கொன்றுவிட்டு புதுமணத் தம்பதி தற்கொலை!

கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் வச்சல் பகுதியை சேர்ந்த ஸ்ரீஜா (வயது 38) என்ற பெண்ணிற்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த புதன்கிழமை அன்று அவர் 2வது திருமணம் செய்துகொண்டார். இவருக்கு சுராஜ் (12), சுஜின் (10), சுரபி (8) என 3 குழந்தைகள் உள்ளன. கடந்த புதன்கிழமை அன்று ஷஜி (வயது 42) என்பவரை ஸ்ரீஜா 2வது திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதி 3 குழந்தைகளுடன் ஷஜியின் வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷஜியின் வீட்டில் ஸ்ரீஜா அவரது கணவர் ஷஜி மற்றும் 3 குழந்தைகள் என 5 பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக 3 குழந்தைகளையும் தூக்கிலிட்டு கொலை செய்துவிட்டு ஸ்ரீஜா மற்றும் அவரது கணவர் ஷஜி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2வது திருமணம் செய்து 8 நாட்களில் 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தம்பதி தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rupa

Next Post

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லவிருக்கும் பக்தர்களுக்கு முக்கிய தகவல்!!

Wed May 24 , 2023
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியிடப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது.   இந்நிலையில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகஸ்ட் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் நாளை காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படும் என்று  திருமலை திருப்பதி […]

You May Like