fbpx

திருமணம் ஆன நாள் முதல் கணவனுடன் டிஷ்யூம் டிஷ்யூம்…..! கல்யாணம் ஆன இரண்டே மாதத்தில் புதுமண பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்….!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்துள்ள கீழ் அனுப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன்(29). இவருக்கும் சீர்காழியில் அடுத்துள்ள அரசூரை சேர்ந்த ரோஜா(25) என்ற பட்டதாரி பெண்ணுக்கும் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி சிதம்பரத்தில் திருமணம் நடந்தது. இந்த நிலையில், திருமணம் ஆன நாள் முதல் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

வழக்கம்போல நேற்று இரவும் ரோஜாவும், சிலம்பரசனும் தகராறு செய்து கொண்டனர். இதில் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் கொண்ட சிலம்பரசன் தன்னுடைய கையில் இருந்த பிளேடால் ரோஜாவின் கழுத்தை அறுத்துள்ளார். இந்த சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரோஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து கணவர் சிலம்பரசன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

மேலும் இது பற்றி அறிந்து கொண்ட கிள்ளை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் திருமணமான 2️ மாதத்தில் புதுமணப்பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

லாட்டரியில் அடித்தது ரூ.25 கோடி..!! ஆனா, இதை வாங்குறதுக்குள்ள உசுரே போயிருச்சு..!! என்ன நடந்தது தெரியுமா..?

Tue Jul 4 , 2023
லாட்டரி அடிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். ஆனால் எல்லோருடைய கனவுகளும் நனவாக வேண்டும் என்பது அவசியமில்லை. சிலருக்கு அதிர்ஷ்டம் உண்டு. ஒருவருக்கு லாட்டரி அடித்தது தெரிந்தால் அவருக்கு எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். ஆனால், லாட்டரி சீட்டைத் தேடத் தொடங்கும் போது, ​​அது கிடைக்காமல் போனால் அவரது நிலை என்னவாகும். அமெரிக்காவில் ஒருவருக்கு அப்படித்தான் நடந்திருக்கிறது. மதுக்கடையில் 25 கோடி ரூபாய் லாட்டரி சீட்டை மறந்துவிட்டார் அவர். […]
லாட்டரியில் அடித்தது ரூ.25 கோடி..!! ஆனா, இதை வாங்குறதுக்குள்ள உசுரே போயிருச்சு..!! என்ன நடந்தது தெரியுமா..?

You May Like