திருமணமான இரண்டே நாளில், சேலம் ஆண்டிப்பட்டி சேர்ந்த புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
சேலம் மாவட்டம், கொண்டாலம்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி பனங்காடு பகுதியை சேர்ந்தவர் முத்து (23). அவர் வெள்ளி கொலுசு பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவருக்கும் அனிதா (19) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தேறியது.
யாரும் வீட்டில் இல்லாத சமயம், அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை.
இது குறித்து கொண்டாலம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு குறித்து கலெக்டர் தலையிட்டு விசாரணை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
திருமணமான இரண்டே நாளில் புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்டது அங்கு வசிப்பவர்களையும், அவரது உறவினர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.