நவீன் ,கண்மணி இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
நவீன் சின்னத்திரையில் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்துள்ளார். அதில் கலர்ஸ் தமிழில் தொலைக்காட்சியில் சிவா என்ற கேரக்டரில் இதயத்தை திருடாதே என்ற தொடரில் நடித்து அந்த கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதை மனதில் இடம் பிடித்தார்.
பின்பு கண்ட நாள் முதல் தொடரிலும் நடித்து வந்துள்ளார். கண்மணி பல தொலைக்காட்சி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருபவர். அதில் ஜெயா டிவி, மாலை முரசு, சன் டிவி, காவிரி போன்ற சேனல்களில் செய்தி வாசித்து வந்துள்ளார். இந்த நிலையில், நவீன் மற்றும் கண்மணி இவர்கள் இருவரும் சேர்ந்து தங்களுடைய ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளனர் .
அது என்னவென்றால் கண்மணி தற்சமயம் 6 மாதம் கருவுற்று இருப்பதாக இவர்கள் இருவரும் சேர்ந்து வீடியோ வெளியிட்டுள்ளனர். இதனை கண்ட ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வண்ணம் உள்ளனர்