fbpx

நாமக்கல்: “அங்கன்வாடி பெண் ஊழியர்களை ஆபாச படம் எடுத்த பத்திரிகையாளர்..” காவல்துறை அதிரடி நடவடிக்கை.!

நாமக்கல் அருகே அங்கன்வாடி ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பத்திரிக்கையாளர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜங்களாபுரம் என்ற பகுதியில் வசித்து வருபவர் பெரியசாமி. 46 வயதான இவர் பத்திரிக்கை ஒன்றில் நிருபர் மற்றும் ஏஜென்டாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் அப்பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்ற பெரியசாமி அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த பெண் ஊழியர்களை மறைந்திருந்து புகைப்படம் எடுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அவரைப் பிடித்து கேட்டபோது ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு தனக்கு பணம் தர வேண்டும் என தெரிவித்துள்ளார் மேலும் பணம் கொடுக்க மறுத்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் நடவடிக்கையில் இறங்கிய எஸ்.ஐ பிரியா பெரியசாமியை கைது செய்தார் . அவர் மீது பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்டது மற்றும் இரட்டை அர்த்த வசனங்களில் பேசியது போன்ற பல புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்து இருக்கிறது.

Next Post

’யாருக்கு எப்போது விருது வழங்க வேண்டுமென்பது மத்திய அரசுக்கு தெரியும்’..!! விஜயகாந்த் நினைவிடத்தில் எல்.முருகன் பேட்டி..!!

Sat Jan 27 , 2024
சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்து இன்றோடு 31 நாட்கள் நிறைவு பெறுகிறது. அவர் ஒரு தலைசிறந்த சமூக சேவகர். ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்பவர். எம்ஜிஆருக்கு பிறகு கருப்பு எம்ஜிஆர் என புகழ் பெற்றவர் விஜயகாந்த் தான். அவர் சேவையை […]

You May Like