தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது இந்த நிலையில் தற்போது 11ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் 91.47% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக தேர்வு எழுதிய 12,889 மாணவ மாணவிகளில் 5,448 மாணவர்களும், 6342 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 94.90% மாணவிகளும் 87.79% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நடப்பு கல்வி ஆண்டிற்கான 11-ம் வகுப்பு பொது தேர்வு கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 5 தேதி வரையில் நடைபெற்றது இந்த பொது தேர்வை 7, 70000 மாணவ மாணவிகள் எழுதினர். மாணவர்கள் இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in,www.dge.tn.gov.in உள்ளிட்ட இணையதளங்களின் மூலமாக அறிந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. அதோடு பள்ளி மாணவர்கள் மற்றும் தனி தேர்வர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தியின் மூலமாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது.