தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கின்றன. அதன்படி தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 90.93% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.. பதினோராம் வகுப்பு பொது தேர்வில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவர்களே அதிகளவில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். 94.36% மாணவிகளும், 86.99 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 7.37% அதிக அளவில் தேர்ச்சிப்பெற்றிருக்கிறார்கள்.
இதில் 96.36% தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்திருக்கிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி தொடங்கிய 11ம் வகுப்பு பொது தேர்வு ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி வரையில் நடைபெற்றது இந்த தேர்வை 7.73 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவ, மாணவிகள் அனைவரும் www.tnresults.nic.in,www.dge.tn.gov.in போன்ற வலைதளங்களில் சென்று தங்களுடைய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். அதோடு தாங்கள் படித்த பள்ளிகளிலும் நூலகங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் தனி அலுவலகங்களிலும் இந்த தேர்வு முடிவுகளை கட்டணம் இல்லாமல் இலவசமாக தெரிந்து கொள்ளலாம்.