தற்போது கோடை காலம் தொடங்கி இருக்கின்ற நிலையில், நாடு முழுவதும் கோடையின் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக, பல சமயங்களில் குழந்தைகள், முதியவர்கள் என்று பலரும் தங்களுடைய உயிரையும் இழக்கும் சம்பவமும் நடைபெற்று வருகிறது.
தமிழக முத்தட பல்வேறு மாநில அரசுகள் வெயில் சமயத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்திய வண்ணம் இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் தான் கர்நாடக மாநிலத்தில் தேர்தலும் மிக விரைவில் நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற அரசு விழா ஒன்றின் போது வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் 14 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புகளுக்கு அரசின் தவறான வழிகாட்டுதல்கள் மற்றும் நிர்வாகம் தான் பொறுப்பு என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில், உத்தவ் தாக்கரே தரப்பைச் சேர்ந்த எம்பி சஞ்சய் ராவத் அரசு விழாவில் பங்கேற்றுக் கொண்ட போது வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் 50 முதல் 70 பேர் வரையில் உயிரிழந்திருக்க கூடும் என்றும், அரசு உண்மையான உயிரிழப்பை மறைக்கிறது என்றும் குற்றம் சுமத்தி இருக்கிறார்.
அதிக வெயிலின் தாக்கம் போதிய குடிநீர் இல்லாமல் போன்றவை தான் மக்களின் உயிரிழப்புக்கு காரணம் எனவும் மக்கள் உயிரிழந்த சமயத்தில் ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த உயிரிழப்புகளுக்கு உங்களுடைய அரசு தான் காரணம். உங்களுக்கு தைரியம் இருந்தால், மனிதாபிமானம் இருந்தால் முதலமைச்சர் ஏக்நாத்ஷிண்டே, உள்துறை அமைச்சர் தேவேந்திர பட்னவிஸ், கலாச்சாரத்துறை அமைச்சர் சுதிர் முங்கண்டிவார் உள்ளிட்டோருக்கு எதிராக புகார் வழங்குங்கள் என்று கூறியுள்ளார்.