ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 19 வயதான கல்லூரி மாணவி ஒருவர் பி டெக் 2ம் ஆண்டு படித்து வந்தார். இத்தகையினில் கடந்த 11ஆம் தேதி அந்த மாணவி அதே கல்லூரி வகுப்பறையில் உயிரிழந்த நிலையில், கிடந்துள்ளார்.
வகுப்பறையில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து வகுப்பறையின் கதவுகளை சாத்திக்கொண்டு அந்த மாணவி உள்ளே இருந்துள்ளார். வெகு நேரம் ஆன பின்னரும் கதவை திறக்காததால் மற்ற மாணவிகள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது மாணவி ரத்தத்துடன் சடலமாக கிடந்திருக்கிறார். அதோடு, அவருடைய உடலுக்கு அருகே 6️ மாதம் ஆன கரு ஒன்று கிடந்ததாக கூறப்படுகிறது.
இதனைக் கண்டு அதிர்ச்சிக்கு உள்ளான கல்லூரி நிர்வாகம் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளது உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதோடு, இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
மேலும் அந்த மாணவி கரு கலைப்பு காரணமாக, உயிரிழந்தாரா? இல்லையென்றால் youtube போன்ற சமூக வலைதளங்களை பார்த்து கருக்கலைப்பு முயற்சியில் ஈடுபட்ட போது உயிரிழந்தாரா? என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
அதோடு மாணவியின் கைபேசியை கைப்பற்றி காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் மாணவிக்கும் ஆனந்த சாகரம் பகுதியைச் சேர்ந்த டாக்ஸி டிரைவர் ஒருவருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது தெரிய வந்திருக்கிறது. ஆகவே அவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.