கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக அரசு தமிழகத்தில் பொறுப்பேற்றவுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக திரு. இறையன்பு ஐஏஎஸ் அவர்களும், தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு காவல்துறை இயக்குனராக திரு. சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்களும் நியமனம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், அடுத்த மாதம் 30 ஆம் தேதியோடு இந்த இருவரின் பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது. இதனைத் தொடர்ந்து இறையன்புவுக்கு தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் பதவி வழங்கப்படும் என்று தகவல் கிடைத்திருக்கிறது. அதேபோன்று டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இயக்குனர் பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.