fbpx

தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று கனமழை….! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை…..!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்து குறிப்பிடும் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது ஆகவே இன்று முதல் வரும் மூன்றாம் தேதி வரையில் தமிழகம் புதுவை போன்ற மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகளிலும் வரும் நான்காம் தேதி ஒரு சில பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது.

மேலும் இன்று திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் ஓர் ஒரு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மிக கனமழையும் பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், திருப்பூர், தென்காசி, திண்டுக்கல், கோவை ,தேனி, ஈரோடு, நீலகிரி, தர்மபுரி, சேலம் போன்ற மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழையின் பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று தலைநகர் சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய தேசான்ற முதல் விதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. என்று கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி ஆன நேற்றைய தினம் காலை 8:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மதுரை பேரையூரில் 11 செண்டி மீட்டர் மழையும், திருநெல்வேலி ராதாபுரத்தில் 9 சென்டிமீட்டர் கனமழையும், கோவை, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், பில்லூர் அணை போன்ற பகுதிகளில் தலா 8 சென்டிமீட்டர் மழையும், கொடநாடு, வாலாஜா, மணமேல்குடி, கோவில்பட்டி போன்ற பகுதிகளில் 7 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி இருக்கிறது.

Next Post

ஒரே நாளில் 4 தேர்வு முடிவுகள்…..! டி.என்.பி.எஸ்.சி அதிரடி…..!

Mon May 1 , 2023
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் சென்ற வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற குரூப்1 முதல் நிலை தேர்வு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை நிருபர் தேர்வு, மீன்துறை ஆய்வாளர் தேர்வு, சென்ற பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற சுகாதார அலுவலர் தேர்வு உள்ளிட்ட 4 போட்டி தேர்வுகளின் முடிவுகளையும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்த நிலையில், அடுத்த கட்ட தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவு எண்கள் […]

You May Like