fbpx

கள்ளச்சாராயம் குடித்து மூவர் உயிரிழந்த சம்பவம் காவல்துறை ஆய்வாளர்கள் அதிரடி பணியிடை நீக்கம்…..! டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு…!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியர் குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மூவர் கலாச்சாராயம் குடித்து உயிரிழந்தனர்.

மேலும் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இதன் காரணமாக, எக்கியர் குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க வேண்டும் என்று மீனவ கிராம வாசிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் ஒன்று திரண்டனர்.

அந்த கிராமத்தில் உள்ள பூமீஸ்வரர் ஆலயம் பேருந்து நிறுத்தம் அருகே அவர்கள் கண்ணீர் மல்க மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் தான் கலைந்து செல்வோம் என்று பொதுமக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இத்தகைய நிலையில், இந்த விவகாரம் குறித்து, மரக்காணம் காவல்துறை ஆய்வாளர் அருள் வடிவேல் அழகன், மதுவிலக்கு காலால் காவல்துறை காவல் ஆய்வாளர் மரிய சோபி மஞ்சுளா உள்ளிட்டோரை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Next Post

விருதுநகர் அருகே இரு வேறு இடங்களில் இரு வேறு அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள்….! காவல்துறையினர் தீவிர விசாரணை…..!

Sun May 14 , 2023
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில், கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதேவிக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர் அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் காவல் நிலையத்தில் வழங்கிய புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பத்தலுபட்டி விலக்கு […]

You May Like