உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் போன்ற நீதிமன்றங்கள் உள்ள பகுதிகளிலும் மற்றும் அரசு சார்ந்த முக்கிய கட்டடங்கள் இருக்கின்ற பகுதிகளிலும், பொது இடங்களிலும் தேவையில்லாமல் ட்ரோன்களை பறக்க விடக்கூடாது என்று காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நுழைவாயில் வருகை நேற்று முன்தினம் கேமரா ஒன்று பறந்து வீடியோ கேமராவில் படம் எடுத்துக் கொண்டிருந்தது.
இந்த ட்ரோனை பறக்க விட்டதாக தெரிவித்து சென்னை மாநகர காவல் துறையினர் வித்யாசாகர்(27), விக்னேஸ்வரன்(30) சூர்யா(30) உள்ளிட்ட மூவரை அதிரடியாக கைது செய்தனர். அதன் பிறகு அவர்கள் மூவரும் ஜாமினில் வெளியே வந்திருக்கிறார்கள்.
காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அந்த 3 இளைஞர்களிடம் கேட்டபோது ஒரு தனியார் நிறுவன விழாவுக்காக நாங்கள் ட்ரோன் கேமரா மூலமாக படம் பிடித்தோம் என்று அந்த 3 இளைஞர்களும் விளக்கமளித்திருக்கிறார்கள்.