fbpx

ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்ற உத்தரவு…! தமிழக அரசு அதிரடி…!

பொதுவாக 5 வருடங்களுக்கு ஒரு முறை ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதேபோல ஐபிஎஸ் அதிகாரிகளும் பணியிடமாற்றம் செய்யப்படுவார்கள்.ஆனால்பெரும்பாலும் இந்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் என்பது தேர்தல் காலங்களில் தேர்தல் ஆணையத்தால் மட்டுமே செய்யப்படும்.

எப்போதாவது அத்தி பூத்தாற்போல மாநில அரசு இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அப்படி ஒரு அதிரடி நடவடிக்கைதான் தற்போது தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.அதாவது 34 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதில் 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இணைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குனராக இருந்த ஜெயசீலன் ஐஏஎஸ், திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த பிரதீப்குமார் ஐஏஎஸ் உட்பட சுமார் 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இணை அரசு செயலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை ஆணையராக இருந்த நந்தகுமார் ஐஏஎஸ் உட்பட 27 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அரசு செயலாளராக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.அதேபோல 45 ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. பணியிட மாற்றம் செய்யப்பட்ட 45 ஐபிஎஸ் அதிகாரிகளில் 27 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

5️ ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியில் இருந்து கூடுதல் டிஜிபி ஆகவும் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியில் இருந்து ஐஜியாகவும், 5 ஐபிஎஸ் அதிகாரிகள் எஸ்பியிலிருந்து டிஐஜியாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளார்கள். ஒட்டுமொத்தமாக 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். உணவுத்துறை ஐஜியான ஈஸ்வரமூர்த்தி கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வுடன் தமிழக காவல்துறை அகாடமி கூடுதல் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதே போன்று மதுரை மாநகர காவல் துறை ஆணையராக நரேந்திரன் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார், சென்னை மாநகரின் தென்பகுதி சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக இருந்த கே எஸ் நரேந்திரன் நாயர் மதுரை மாநகர காவல் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்சமயம் வரையில் மதுரை மாநகர காவல் ஆணையாளராக இருந்த செந்தில்குமார் தலைநகர் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறை பயிற்சி பள்ளி ஐ ஜி அருண் பதவி உயர்வுடன் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி காவல் ஆணையர் கார்த்திகேயன் மத்திய மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டிருக்கிறார், கள்ளக்குறிச்சி எஸ் பி பகலவன் பதவி உயர்வுடன் காஞ்சிபுரம் சரக டிஐஜி யாக பொறுப்பேற்றுள்ளார்.

காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா பதவி உயர்வுடன் திருச்சி மாநகர ஆணையாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார், மதுரை மாநகர காவல் துறை துணை ஆணையராக பணியாற்றிய மோகன்ராஜ் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Next Post

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் கர்ப்பமான முக்கிய நபர்! மகிழ்ச்சியில் துள்ளி குதித்த குடும்பத்தினர்!

Sun Jan 1 , 2023
விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நெடுந்தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு தமிழகத்தை பொறுத்தவரையில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த தொடரை தொடக்கத்திலிருந்து பார்த்த நபர்கள் பலர் தற்போது இந்த தொடரை காண்பதில்லை. காரணம் முதலில் இந்த தொடரில் இருந்த கதைக்களம் தற்போது முற்றிலுமாக மாறி வேறு விதமான கதைகளத்தை நோக்கி பாண்டியன் ஸ்டோர்ஸ் சென்று கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் முல்லை என்றால் தமிழகத்தில் […]

You May Like