தமிழகத்தில் பரமக்குடி மாவட்டத்தில் இருக்கின்ற சுந்தரராஜ பெருமாள் கோவில் சித்திரை திருவிழா நேற்று ஆரம்பமானது. அதன் தொடர்ச்சியாக திருவிழாக்கள் நடக்கும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த திருவிழாவின் சிறப்பாக வருகின்ற 5ம் தேதி கள்ளழகர் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குவார்.
அதனை கண்டு களிப்பதற்காக ஏராளமான வர்த்தகரிகள் அன்றைய தினம் பரமக்குடி வட்டத்திற்கு வருகை புரிவார்கள். ஆகவே பரமக்குடி வட்டத்திற்கு மட்டும் முழு விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக வரும் இருபதாம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் உள்ளூர் விடுமுறையை முன்னிட்டு சார்நிலை கருவூலம் மற்றும் அரசு அலுவலகங்களும், அவசர அலுவலகங்கள் மற்றும் குறைந்தபட்ச பணியாளர்களுடன் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.