தலைநகர் சென்னையில் சமீபகாலமாக ரவுடிகளின் தொந்தரவு அதிகரிக்கத் தொடங்கி விட்டது. காலமாக தமிழகம் அமைதி பூங்காவாக இருந்து வந்தது. என்று அதிமுக தெரிவித்து வந்தாலும் அதிமுக ஆட்சியில் இருந்த 10 ஆண்டு காலமும் தமிழகத்தில் ஆங்காங்கே கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் தான் இருந்தனர்.
ஆனால் தற்சமயம் இந்த கொலை, கொள்ளை, உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் படிப்படியாக அதிகரிக்க தொடங்கி விட்டனர். ஒருவரும் கோதை பொருளை கட்டுப்படுத்துவோம் என்று தமிழக அரசு தெரிவித்து வந்தாலும் அதிமுக ஆட்சியை விட, திமுக ஆட்சியில் தான் போதை பொருளின் பழக்கம் இளைஞர்கள் இடையே அதிகமாக உள்ளது என்று ஒரு குறிப்பு சொல்கிறது.
இந்த நிலையில், சென்னை புளியந்தோப்பு பவானி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோ (31) இவர் கடந்த 6ம் தேதி இரவு இவருடைய உறவினரான ஆகாஷ், அஜித் உள்ளிட்டோரை புளியந்தோப்பு தாஸ் நகர் 7வது தெருவை சேர்ந்த சசிகுமார் (26) மற்றும் அவருடைய நண்பர்கள் இடைமறித்து தாக்கியுள்ளனர்.
இதனை அறிந்து வந்த மனோ அவர்களை தட்டிக் கேட்க புளியந்தோப்பு பகுதிக்கு சென்று இருக்கிறார். அங்கே இரு தரப்புக்கும் இடையே தகராறு உண்டாகியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சசிகுமார் மற்றும் அவருடைய நண்பர்கள் உள்ளிட்டோர் சேர்ந்து மனோவை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக புளியந்தோப்பு காவல் நிலைய காவலர்கள் வழக்கு பதிவு செய்து தலைமறைவான கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்தனர்.
இந்த நிலையில் தான் மனோவின் கொலை குறித்து புளியந்தோப்பு சசிகுமார் அவருடைய கூட்டாளிகளான அதே பகுதியை சார்ந்த திருநாவுக்கரசு (27) அப்பு என்ற அஜய் குமார்( 23) கன்னிகாபுரம் அருண் (22) குறுக்குப்பேட்டை பில்லான்ராஜ் (69) ரேவதி (33) தேவி (32) உள்ளிட்ட 8️ பேரை காவல்துறையினர் கைது செய்தது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கொலையான மனோ என்ற 2021 ஆம் வருடம் சசிகுமாரை கத்தியால் தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளார். என்பதும் இதன் காரணமாக, மனோ மற்றும் சசிகுமார் உள்ளிட்ட வருட முன் விரோதம் இருந்து வந்துள்ளது என்றும் தெரிகிறது. இந்த நிலையில் பழைய முன் விரோதம் காரணமாக, இந்த கொலை நடைபெற்று இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.