fbpx

இந்த வயதில் செய்யக்கூடிய காரியமா இது…..? 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 81 வயது முதியவர் மேற்கு வங்கத்தில் பரபரப்பு……!

மேற்கு வங்கம் மாநிலம் மால்டா என்ற மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை கஜோல் என்ற பகுதிக்கு அருகே நான்கு வயது சிறுமி வருவர் தன்னுடைய வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்ததை பங்கிம் சந்திரராய் என்ற 81 வயது முதியவர் பார்த்துள்ளார்.

அப்போது அந்த சிறுமைக்கு சாக்லேட் வாங்கி கொடுத்திருக்கிறார். அந்த முதியவர் அதன் பிறகு அந்த சிறுமியை அருகில் உள்ள தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி தன்னுடைய பிறப்புறுப்பில் வலி உள்ளதாக தெரிவித்து பெற்றோரிடம் அழுதுள்ளார்.

அதன் பிறகு சிறுமி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே செய்யப்பட்ட பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடைமைக்கு உள்ளானதை மருத்துவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் கஜோல் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். அதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையின் முடிவில் பாதிக்கப்பட்ட குழந்தையின் வீட்டிற்கு அருகில் உள்ள பங்கிம் சந்திரராய் வீட்டிலிருந்து காவல் துறையினர் அவரை கைது செய்தனர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Post

கோடை காலத்தில் ஐஸ் க்ரீம் சாப்பிடுவதை நிறுத்துங்கள்..!! அதற்கு பதில் இதை வாங்கி சாப்பிடுங்கள்..!!

Sun May 7 , 2023
கோடைகாலம் தொடங்கி விட்டாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளிர்ச்சியான உணவு பொருட்களை உட்கொள்வதை தான் விரும்புவார்கள். அந்த வகையில், குளிர்ச்சியான மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய நுங்கு நமது உடலுக்கு என்னென்ன ஆரோக்கியதை அளிக்கிறது என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். பனை மரம் தமிழகத்தின் மாநில மரம். வெப்பமண்டல காடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பில் பனை மரங்களும் அடங்கும். அதே நேரத்தில், பனை குடும்பத்தில் பொருளாதார ரீதியாக குறிப்பிடத்தக்க […]

You May Like