சென்னை அண்ணா அண்ணா நகரை அடுத்துள்ள திருமங்கலம் பகுதியை சேர்ந்த 55 வயதான குமார் என்ற முதியவர் அதே பகுதியில் வசித்து வந்த ஆறு வயது சிறுமி ஒருவரிடம் தன்னுடைய வீட்டு மாடியில் பூனைகள் உள்ளதாக தெரிவித்து மாடிக்கு அழைத்துக்கொண்டு சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்து கொண்ட அந்த சிறுமியின் தாயார், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழங்கிய புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைத் சட்டத்தின் படி கடந்த வருடம் பிப்ரவரி மாதம் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் முதியவர் குமார் கைது செய்யப்பட்டார்.
இது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி எம். ராஜலட்சுமி இந்த வழக்கை விசாரித்தார். அப்போது காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் டிஜி கவிதா ஆஜராகி வாதம் செய்தார்.
அப்போது நீதிபதி வழங்கிய உத்தரவில் குமாருக்கு 20 ஆண்டுகால சிறை தண்டனையும், 30 ஆயிரம் மதிப்பு தீர்ப்பு வழங்கி இருக்கிறார். அத்துடன் அபராத தொகையை சிறுமிக்கு வழங்க வேண்டும் என்றும், உத்தரவு பிறப்பித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5️ லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும் அவர் உத்தரவு பிறப்பித்தார்.