fbpx

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மும்பையை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த கோவை இளைஞர் மீது வழக்கு பதிவு…!

தற்போதைய இளைஞர்கள் இளம் பெண்களை ஆசை வார்த்தை கூறி, அவர்களுக்கு வேண்டியதை பெண்களிடமிருந்து பெற்றுக் கொண்டு, பின்பு அந்த பெண்களை ஏமாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இது போன்ற செயல்கள் நடைபெறுவதற்கு முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. பொதுவாக ஒரு பழமொழி இருக்கிறது. அதாவது, ஏமாற்றுபவனை விட ஏமாறுபவனே குற்றவாளி என்ற பழமொழி இருக்கின்றது.

அந்தக் கூற்றின் அடிப்படையில், பெண்கள் அனைத்து விஷயங்களிலும் உஷாராக இருந்தால் ஆண்களால் நிச்சயமாக அவர்களை ஏமாற்ற முடியாது. ஆனால் அனைத்து பெண்களும் அப்படி இருப்பதில்லை.

கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் செந்தில் குமார் (24) இவருக்கும், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சார்ந்த 27 வயது பெண்ணுக்கும் முகநூல் பக்கம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. அதோடு இருவரும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

தொடர்ச்சியாக 4 வருடங்களாக பழகி வந்த அந்த பெண்ணிடம் அந்த பெண்ணை நேரில் பார்க்க ஆசைப்படுவதாக செந்தில்குமார் தெரிவித்திருக்கிறார். இதனால் செந்தில்குமார் பிறந்த நாளை முன்னிட்டு அந்த பெண் கோவை மாவட்டத்திற்கு வந்துள்ளார்.

அந்த சமயத்தில் இருவரும் பல பகுதிகளுக்கு சென்று இருக்கிறார்கள். அதோடு ஆர்.எஸ் புறத்தில் இருக்கின்ற ஒரு விடுதியில் அரை எடுத்து தங்கி இருவரும் உடலுறவில் ஈடுபட்டதாக சொல்லப்படுகின்றது. அதன் பிறகு செந்தில்குமார் அந்த பெண்ணிடம் பேசுவதை தவிர்த்து இருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த அந்த பெண் ஆர் எஸ் புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்.

அந்த புகாரில், அந்தப் பெண் தெரிவித்திருப்பதாவது திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்ததாக குறிப்பிட்டிருக்கிறார். இதனை அடிப்படையாகக் கொண்டு, செந்தில்குமார் மீது 420 மற்றும் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Next Post

ஒரு எம்எல்ஏ செய்யுற வேலையா…! இது உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு…!

Wed Jan 11 , 2023
நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வந்ததை தொடர்ந்து அது போன்ற கொடூர குற்றங்களை ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு அது அமலுக்கு வந்தது. ஆனாலும் கூட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இதுவரையிலும் குறைந்தபாடில்லை. இது போன்ற தகாத செயல்களில் சமூக விரோதிகளும், ரவுடிகளும் ஈடுபடுவது சகஜமான விஷயம் தான் என்றாலும் கூட ஒரு மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளே […]

You May Like