fbpx

ஜவுளிக்கடை விளம்பரத்தால் அலைமோதிய கூட்டம்; வாடிக்கையாளர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்…!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருக்கும் பிரபல ஜவுளி கடையின் நான்காவது வருட தொடக்க விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் முதலில் வரும் 400 பேருக்கு எந்த ஆடை எடுத்தாலும் ஒரு ஆடை 4 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவித்து இருந்தனர்.

இதனை அறிந்த பொதுமக்கள் காலை 8 மணி முதலே கடையில் வந்து குவிந்தனர். இதனால் கடை இருக்கும் ருக்மணிபாளையம் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் உண்டானது. மேலும் கடையிலும் ஏராளமானோர் திரண்டதால் கூட்ட நெரிசல் அதிகமானது.

கடையில் மலை போல் குவிக்கப்பட்ட உடைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இந்நிலையில் நான்கு ரூபாய்க்கு துணி வாங்க வந்தவர்களில் சிலர் தங்களின் விலை உயர்த்த சென்போன், பணம், கைபை போன்றவற்றை தவறவிட்டு கண்ணீருடன் சென்ற நிலையை பார்க்க பரிதாபம் ஏற்ப்பட்டது.

Baskar

Next Post

சாலை ஓர கடைகளுக்கு சிலிண்டர் .. கூட்டுறவுத்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு..

Wed Sep 28 , 2022
சாலை ஓரத்தில் கடை வைத்திருப்பவர்களுக்கு சிலிண்டர் வழங்க கூட்டுறவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். சிலிண்டரின் விலை ஏறு முகத்தில் உள்ள நிலையில் சாலை ஓரத்தில் கடைகள் வைத்திருப்பவர்கள் செலவை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடுகின்றனர். இந்நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் வரவுள்ள இந்த புதிய திட்டம் சாலை ஓரக் கடைக்காரர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது. இது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி கூறுகையில் ’’ பரிசோனை […]

You May Like