தேனி மாவட்டத்தில் உள்ள செங்குளத்துப்பட்டி தண்ணீர் தொட்டி தெருவில் பால்பாண்டி என்பவர் வசித்து வந்தார். கூலி தொழிலாளியான இவர் தன்னுடைய மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பால்பாண்டி மலை அடிவாரத்தில் விஷம் குடித்த நிலையில், மயங்கி கிடந்துள்ளார். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பால்பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக காவல்துறையினருக்கு புகார் வழங்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் என்பவருக்கும் இடையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இதில் ஆத்திரம் கொண்ட விக்னேஷ் பால்பாண்டியை கடுமையாக தாக்கி இருக்கின்றார். அதோடு இதை தடுக்க வந்த பால்பாண்டியின் தாயார் சீனியம்மாளையும் விக்னேஷ் தாக்கி இருக்கிறார் இதன் காரணமாக, மனம் உடைந்து காணப்பட்ட பால்பாண்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது. ஆகவே விக்னேஷ் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.