கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பழைய ஸ்டேட் பேங்க் காலனி தெருவில் பெர்சியஸ் அலெக்சாண்டர், மாலதி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய 2 மகள்கள் அவர்களை வீட்டில் சிறை வைத்திருப்பதாகவும் ஆகவே இரண்டு வருட காலமாக வெளியே வரவில்லை என்றும் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு அந்த பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் நேற்று முன்தினம் தீயணைப்பு துறை அதிகாரிகள் காவல்துறையினரின் உதவியுடன் சமூக நலத்துறை அதிகாரி சரோஜினி தலைமையில் சென்ற அப்போது வீடு கூட்டப்பட்ட நிலையில் இருந்தது அருகில் விசாரித்த போது எந்த பதிலும் தெளிவாக கிடைக்காததால் கூப்பிட்டும் பதில் வராததால் உடனடியாக வீட்டின் கதவை உடைத்து தீயணைப்பு துறை வீரர்கள் வீட்டின் சுவர் மீது ஏறி குதித்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டுக்குள் அவர்களை சிறை வைத்தபடி இருந்த வழக்கறிஞரான பெர்சியஸ் அலெக்சாண்டர் மற்றும் அவருடைய மனைவி மாலதி பட்டப்படிப்புகள் முடிந்த 2️ மகள்கள் உள்ளிட்டோர அங்கு இருந்தனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணான பதில்களை கூறி வந்தனர்.
அதோட தங்களுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தங்களை திட்டமிட்டு சிலர் கொலை செய்ய மறைந்திருப்பதாகவும் கூறினர். அதோடு தாங்கள் நேரடியாக இயேசுவிடம் பேசுவதாகவும், பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறினர். இதனை தொடர்ந்து, காவல்துறையினர் நேரில் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
தாங்கள் நலமாக உள்ளதாகவும், தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கூறியுள்ளனர் ஆகவே காவல்துறையினர் அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். அதோடு, அவரது உறவினர் ஒருவர் இதுபோன்று அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து விசாரணை நடத்தியது கண்டிக்கத்தக்கது என்று காவல்துறையினிடமும் பத்திரிகையாளர்களிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் அங்கே சற்று பரபரப்பு ஏற்பட்டது.