ஆரம்பத்தில் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் சில காலங்களாக ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘குலு குலு’. இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளனர். இப்படம் ஜூலை 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலவிதமான விமர்சனங்களுக்கு உள்ளானது.
இதை தொடர்ந்து, சந்தானம் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த கோவர்தன் நடிகர் சந்தானத்தை சந்தித்து சமீபத்தில் கதை கூறியுள்ளார். அந்த கதையில், காமெடி, ஃபான்டஸி கலந்த படத்தின் கதை சந்தானத்திற்கு மிகவும்பிடித்திருந்ததால் இந்த படத்தில் நடிக்க சந்தானம் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த படத்தில் சந்தானம் ஐந்து கெட்டப்களில் நடிக்க இருப்பதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐந்து வேடங்களில் சந்தானம் நடித்து வெளிவர உள்ள இந்த திரைப்படம் சந்தானத்திற்கு வெற்றி வாய்ப்பை வழங்குமா பொறுத்திருந்து பார்ப்போம்.