தற்கால இளம் தலைமுறையினர் எதிலும் வேகமாக இருக்கிறார்கள். அதிலும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களிடையே பதின் பருவ வயது முடிவடைவதற்குள்ளேயே காதல் உணர்வு தோன்றி விடுகிறது. அந்த உணர்வு முழுமையான காதல் தானா? அல்லது வெறும் ஈர்ப்பா? என்ற விவரம் புரிவதற்கு முன்னரே, அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை நாசமாக்கி கொள்கிறார்கள்.
அந்த வகையில், கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் சேர்ந்த 15 வயது சிறுமி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கும் சூரனேஸ்வரன் பட்டி பகுதியைச் சேர்ந்த தொழிலாளியான சபரி (22) என்ற நபருக்கும் பழக்கம் ஏற்பட்டது இந்த பழக்கம் நாட்கள் செல்ல, செல்ல காதலாக உருவெடுத்தது. இந்த நிலையில் இருவரும் கைப்பேசியில் பேசி பழகி வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்த காதல் விவகாரம் அந்த சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில், சிறுமியின் பெற்றோர் இவர்களின் காதலுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததால் அந்த சிறுமி திடீர்னு ஒரு நாள் காணாமல் போய்விட்டார். இதனை தொடர்ந்து, பெற்றோர் அந்த சிறுமியை பல்வேறு பகுதிகளில் தேடிப் பார்த்தார்கள்.
ஆனாலும் அந்த சிறுமியை பெற்றோர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். இந்த புகாரை அடிப்படையாக வைத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தினர்.
காவல்துறையினரின் விசாரணையில் சிறுமி சபரியின் வீட்டில் இருப்பதும், ஆசை வார்த்தைகளை கூறி, அந்த சிறுமியை சபரி பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சபரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.