சென்னை தண்டையார்பேட்டையில் ஆட்டோவில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் தண்டையார்பேட்டை திருவொற்றியூர் சாலை பகுதியை சேர்ந்தவர் மோகன் என்ற பல்லு மோகன்(37).
இவர் பந்தல் போடும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவர் குடும்பத்துடன் திருவொற்றியூரில் ஏகவள்ளி அம்மன் கோவில் தெரு தண்டையார்பேட்டை மேற்கு மாட வீதியில் இருக்கின்ற தன்னுடைய நண்பரை பார்க்க நேற்று முன்தினம் சென்றுள்ளார்.
அதன் பிறகு அந்த பகுதியில் மது அருந்திய மோகன் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த விஜய் என்பவருக்கு சொந்தமான ஆட்டோவில் உறங்கிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் காலையில் ஆட்டோவை எடுப்பதற்காக விஜய் வந்து பார்த்தபோது அதில் மோகன் கழுத்தறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி உறைந்தார்.
உடனடியாக இது தொடர்பாக புது வண்ணாரப்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு, வழக்கு பதிவு செய்து தொடர்ந்து இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.