அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 3️ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அதாவது வேட்பு மனுவில் சொத்து மதிப்பை குறைத்து காட்டியதாக எழுந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
சென்ற சட்டப் பேரவை பொதுத் தேர்தலின் போது வேட்பு மனு தாக்கல் செய்த சமயத்தில் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியதாக வழக்கறிஞர் மகலாணி புகார் வழங்கியதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 125ஏ (1),125ஏ உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.