fbpx

வங்க கடலில் ஏற்பட உள்ள புதிய புயல் சின்னம்….! வெளுத்து வாங்க உள்ள மழை….!

வங்க கடல் பகுதியில் ஏற்படும் காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 8ம் தேதி புயல் சின்னமாக மாற வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று முதல் வரும் 8ம் தேதி முதல் தமிழக மற்றும் புதுவையில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விதத்தில், தமிழக சென்னையில் இன்று ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் இருக்கிறது தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நாளை மறுநாள் ஏற்பட உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 8ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வடக்கு திசை நோக்கி நகர்ந்து, மத்திய வங்க கடல் பகுதியில் புயலாக உருமாறும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

நாளை முதல் வரும் 8ம் தேதி வரையில் தமிழகம் மற்றும் புது பல்வேறு பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. வரும் 7 முதல் 10ம் தேதி வரை தென்கிழக்கு வங்க கடப்பகுதியிலும் அதை ஒட்டி உள்ள மத்திய வங்க கடல் பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அத்துடன் ஆழ் கடலின் இருக்கின்ற மீனவர்கள் வரும் 7ம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

Next Post

பிக்பாஸ் சீசன் 7 தொடங்குவது எப்போது….? மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டது விஜய் டிவி….!

Fri May 5 , 2023
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் வருடம் தமிழில் தொடங்கப்பட்டது. அதோடு அந்த தொலைக்காட்சியில் டி.ஆர்.பி யை ஏற்றுவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆனாலும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலமாக அந்த டிவியின் டிஆர்பி வெகுவாக அதிகரிக்க தொடங்கியது. அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் ரசிகர்கள் அதிகரிக்க தொடங்கினர் இந்த நிகழ்ச்சியை நடிகர் […]
பிக்பாஸ்

You May Like