fbpx

காதலனுடன் நிர்வாணமாக வீடியோ கால் பேசிய மாணவி; சிக்கலில் மாட்டிய விபரீதம்..!

கோவை, கோவில்பாளையத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அந்த பகுதியில்  உள்ள அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த வருடம் பத்தாம் வகுப்பு படித்தபோது அவரது வகுப்பில் படித்த மாணவர் ஒருவருடன் மாணவிக்கு நட்பு ஏற்பட்டது. அந்த மாணவர் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் வீட்டில் இருந்து வருகிறார். ஆனால், இருவரும் செல்போனில் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். மாணவியை அவர் காதலிப்பதாக கூறியுள்ளார். மாணவியும் அதற்கு சம்மதித்து அந்த சிறுவனுடன் பேசி வந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் வீடியோ கால் மூலம் பேசிக்கொண்டனர்.

வீடியோ காலில் பேசும்போது மாணவியை நிர்வாணமாக பார்க்க விரும்புவதாக சிறுவன் கூறியுள்ளான். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் தினமும் சிறுவனின் தொல்லை தாங்க முடியாமல் போனதால் சிறுவனின் ஆசைக்கிணங்க மாணவி நிர்வாணமாக வீடியோ கால் பேசியுள்ளார். அதன் பிறகு திரும்பவும் ஒரு நாள் வீடியோ காலில் நிர்வாணமாக பேசுமாறு கூறியுள்ளான். ஆனால் தனக்கு அவ்வாறு பேச பிடிக்கவில்லை என்று மாணவி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன் ஏற்கனவே ஒருமுறை நிர்வாணமாக நீ நின்றதை நான் வீடியோவாக பதிவு செய்து வைத்திருக்கிறேன். இப்போது நீ நிர்வாணமாக வரவில்லை என்றால் அந்த நிர்வாண காட்சிகளை உன் பெற்றோருக்கு அனுப்பி வைத்து விடுவேன் என்று அந்த மாணவி மிரட்டி இருக்கிறான். சிறுவன் பொய் சொல்வதாக நினைத்த சிறுமி, என்னை ஏமாற்ற நினைக்காதே என்று யதார்த்தமாக பேசியுள்ளார். ஆனால் அடுத்த நிமிடமே மாணவியின் செல்போனுக்கு மாணவி நிர்வாணமாக பேசிய வீடியோ காட்சிகளை அந்த மாணவன் அனுப்பி வைத்தான்.

அதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி நிலைமை விபரீதமானதை உணர்ந்து, பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த பிரச்சினையை கூறி அழுதுள்ளார். இதைத்தொடர்ந்து பெற்றோர் அவரை கண்டித்தனர். மேலும் கோவை சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் ஜெயாதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அந்த மாணவி, தன்னுடன் பழகிய சிறுவன் எந்த ஊர் என்று கூட அறியாமல் அவனுடன் நெருங்கி பழகி இருக்கிறார். அதனால் அவன் எந்த ஊர் என்பதை கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். அந்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்‌ பதிவு செய்யப்பட்டு உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவிகள், அதிகமாக இவ்விதமான சிக்கல்களில் மாட்டிக் கொள்வதால், அவர்களை சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

Rupa

Next Post

ஆதரவற்ற 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கி கருவை கலைத்த காவலர்..! போக்சோ சட்டத்தில் நடவடிக்கை..!

Wed Jul 27 , 2022
லால்குடி அருகே ஆதரவற்ற 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கி கருவை கலைத்த காவலரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி மாவட்டம் லால்குடி நன்னிமங்கலம் காலனி வீடு பள்ளிக்கூட தெரு பகுதியைச் சேர்ந்த பெற்றோரை இழந்த 16 வயது சிறுமி, அவரின் பெரியம்மாவிடம் வளர்ந்து வருகிறார். சிறுமியின் தனிமையை பயன்படுத்தி அப்பகுதியைச் சேர்ந்த போலீஸ்காரர், கலால்துறையில் பணியாற்றும் ஒருவர் என சிலர் சிறுமியிடம் வன்முறையில் […]

You May Like