கணவன், மனைவிக்குள் பிரச்சனை வருவது என்பது சகஜமான விஷயம் தான். ஆனால் அந்த பிரச்சனைக்காக உயிரை மாய்த்துக் கொள்வது எந்த விதத்திலும் தீர்வாகாது.
அந்த விதத்தில், தென்காசி வாசுதேவநல்லூர் பகுதியில் சேர்ந்தவர் முருகன் மீனா உள்ளிட்ட தம்பதியினர் முருகன் ஒரு தனியார் ப்ளூ மெட்டல் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகின்றார். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஓடிவிட்ட நிலையில் பிரியா(7) , மோனிகா(1) என 2 மகள்கள் இந்த தம்பதியினருக்கு இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில், தான் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் பிறகு முருகன் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தபோது இரவில் மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட யாரும் வீட்டில் இல்லாததால் வீட்டில் சுற்றுவட்டார பகுதிகளில் தேடிப் பார்த்துள்ளார் முருகன். அப்போது அருகில் உள்ள கிணற்றில் குழந்தைகளுடன் மீனா பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சிக்குள்ளானார்.
அதன்பிறகு காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு, அவர்களின் உதவியுடன் மீனா மற்றும் இரு குழந்தைகளின் உடலை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வாசுதேவநல்லூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, இரு குழந்தைகளுடன் தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், தென்காசி பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.