fbpx

குழந்தை பரிகாரம் கேட்டு வந்த பெண்; சாமியார் செய்த பகீர் சம்பவம்.. போலீசாரின் அதிரடி நடவடிக்கை..!

மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் மகளிர் காவல் துறையினர், மிர்ச்சி பாபா என்று அழைக்கப்படும் சாமியார் வைராக்கியானந்த் கிரி என்பவரை கைது செய்தனர். இந்நிலையில், ஒரு பெண் இந்த சாமியாரிடம் தனக்கு குழந்தை இல்லை என்று கூறி பரிகாரம் கேட்டு வந்துள்ளார்.

அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த தண்ணீரை கொடுத்த அந்த சாமியார் அவர் மயங்கியவுடன், அவரை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். பின்னர் இந்த சம்பவத்தை யாரிடமாவது வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று அந்த பெண்ணை மிரட்டி இருக்கிறார். இதனை தொடர்ந்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த பெண் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த சாமியாரை கைது செய்தனர்.

2019 ஆம் வருடம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திக் விஜய் சிங்கிற்காக இந்த சாமியார் பிரச்சாரம் செய்து பிரபலமானார். நேற்று காவல்துறையில் அந்த பெண் அளித்த புகாரினால், நேற்று இரவு மிர்ச்சி பாபா சாமியாரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Rupa

Next Post

மீண்டும் விஜய் - த்ரிஷா கூட்டணியை இணைக்கும் லோகேஷ் கனகராஜ்..!!

Tue Aug 9 , 2022
14 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய் – நடிகை த்ரிஷா கூட்டணி இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்னிந்திய சினிமாக்களில் உள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்து இன்றும் முன்னணி கதாநாயகியாக உள்ளவர் த்ரிஷா. தமிழ் சினிமாவில் இவர் கொடுத்த எவர்கிரீன் மூவிஸ் எக்கச்சக்கம்..! கிட்டத்தட்ட 20 வருடங்களாக முன்னணி நாயகியாக இருக்கும் த்ரிஷாவுக்கு, தமிழில் முதன்முதலில் மிக பிரமாண்ட வெற்றியை கொடுத்த முதல் படம் கில்லி. இப்படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து, நடிகர் விஜயுடன் […]
மீண்டும் விஜய் - த்ரிஷா கூட்டணியை இணைக்கும் லோகேஷ் கனகராஜ்..!!

You May Like