சென்னை திருவொற்றியூர் பூங்காவனபுரம் 1வது தெருவில் குடியிருப்பவர் மணிமாறன்(35). இவர் தேனாம்பேட்டையில் இருக்கும் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வேலை செய்து வருகிறார். வாரத்திற்கு ஒரு நாள் வீட்டிற்கு வந்து செல்வார் என்று தெரிகிறது. இவரது மனைவி மைதிலி (34) இவர் சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
கடந்த மூன்றாம் தேதி எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் இருக்கும் அவரது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தன்னுடன் வேலை பார்க்கும் ஜெய்சங்கர் என்பவரின் பைக்கில் திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே வந்து இறங்கி இருக்கிறார். அப்போது ஜெயசங்கருடன் மைதிலியை பார்த்த அவரது கணவர் மணிமாறன் இரண்டு பேரும் எங்கே சுற்றி விட்டு வருகிறீர்கள் என கேட்டு மனைவியிடம் சன்டை போட்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மைதிலியை காணவில்லை. கணவர் மணிமாறன் உறவினர்களுடன் சேர்ந்து மனைவியை தேடியுள்ளார். ஆனால் மைதிலி கிடைக்கவில்லை.
இதனால் கடந்த 5-ஆம் தேதி இதுகுறித்து திருவொற்றியூர் காவல் நிலையத்தில் மணிமாறன் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் மணலி புதிய மேம்பாலம் அருகில் உடல் எரிந்த நிலையில் மைதிலியின் உடல் கிடந்துள்ளது. அதனை பார்த்து அதிர்ச்சி அடைந் பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மணலி காவல்துறையினர் மைதிலியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்டாலி ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கணவர் மணிமாறனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.