fbpx

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞர்….! விழுப்புரம் அருகே பரபரப்பு….!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே இருக்கின்ற ராதாபுரம் கிராமத்தை சேர்ந்த சுகன் என்பவரின் மகள் தரணி இந்த சூழ்நிலையில், தரணி தன்னுடைய வீட்டின் தோட்டத்தில் இருந்தபோது அந்த பகுதியில் மறைந்திருந்த வாலிபர் ஒருவர் கண்ணிமைக்கும் சமயத்தில் தரணியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

மகளின் அலறல் சத்தத்தை கேட்டு அந்த பெண்ணின் பெற்றோர் ஓடி வந்து பார்க்கும்போது மகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தரணி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து விக்ரவாண்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விக்ரவண்டி காவல்துறையினர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கணேஷ் என்ற இளைஞரை தரணி காதலித்து வந்ததாகவும், அவர் நடவடிக்கை சரி இல்லாததால் அவருடன் பேசுவதை தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஆத்திரம் கொண்ட கணேஷ் மறைந்திருந்து தரணியை கொலை செய்தது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கணேசன் (25) என்ற இளைஞரை 2 மணி நேரத்தில் காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Next Post

ஷாக்.. இதுவரை இல்லாத புதிய உச்சம்.. ஒரே நாளில் ரூ.880 உயர்ந்த தங்கம் விலை...

Sat Mar 18 , 2023
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.44,480-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் அமெரிக்காவில் […]
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

You May Like